Skip to main content

Posts

https://youtu.be/rhrDXN-_JXw
verified :) but make a try Get 100 Rupee BookMyShow Winpin By Filling A Survey on 7th dec https://goo.gl/sYyZjE
ஏடிஎம்கள் தவிர வேறு எங்கெல்லாம் பணம் பெறலாம்? மாத ஊதியத்தினை வங்கிக் கணக்கில் பெற்றவர்கள் ஏடிஎம் மையங்களுக்கு மாற்றாக எங்கெல்லாம் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பதைக் காணலாம். ரூபாய் மதிப்பிழப்பு விவகாரத்தால் பணப்புழக்கம் குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மாத ஊதியம் பெறுபவர்கள் ஏடிஎம் மையங்களை நோக்கி இன்றே படையெடுக்கத் தொடங்கி விட்டனர். இதனால் ஏடிஎம் மையங்கள் வாசலில் வரிசை மேலும் நீண்டுள்ளதை பல இடங்களில் காணமுடிகிறது.  ஏடிஎம் மையங்கள் தவிர வங்கிக் கிளைகளுக்கு நேரடியாக சென்றும் பணம் எடுத்துக் கொள்ளலாம். அதுதவிர சில மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள.பிக்பஜார் வணிக வளாகங்கள் மற்றும் ஐனாக்ஸ் மால்களில் டெபிட் கார்டுகள் மூலம் ரூ.2,000 வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள் மூலம் மக்கள், தங்கள் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது அதேபோல, மும்பையை சேர்ந்த மெட்ரோ, மோசி, கேட்வால்க், ஆசியாடிக், ரூபம், பென்சர்,...
ஆசிய மகளிர் டி20: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா பாங்காக்: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இன்று வீழ்த்தியது. தாய்லாந்தில் நடந்து வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் செவ்வாய்கிழமை (இன்று) நடைபெற்றது.இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் இந்திய அணி கேப்டன் ஹர்மான்ப்ரீத் கௌர்.இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் நைன் அபிதி மட்டும் சற்று தாக்குபிடித்து 37 ரன்கள் எடுத்தார். இதானல் 20 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 97 ரன்களில் சுருண்டது. இந்தியா சார்பில் ஏக்தா பிஸ்ட் 3, அஞ்சு மற்றும் கௌர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் இந்திய மகளிர் அணி முதலிடத்துக்கு முன்னேறியது. டிசம்பர் 1-ந் தேதி இலங்கையுடன் மோதவுள்ளது.
வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்வு நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை எடுப்ப‌ற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் தற்போது வாரத்திற்கு ரூ.24,000 வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடு காரணமாக வங்கியில் பணத்தை ‘டெபாசிட்’ செய்ய வாடிக்கையாளர்கள் தயங்கியதாக தெரியவந்தது. இதனையடுத்து வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்துள்ளது. அதன்படி, இன்று முதல் தற்போது அமலில் இருக்கும் உச்சவரம்பைக் காட்டிலும் (ஒரு வாரத்திற்கு ரூ.24,000) அதிகமாக பணம் எடுக்க முடியும். அவ்வாறு அதிகமாக பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள அதிகபட்ச மதிப்பு கொண்ட புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கோஹ்லிக்கு வாழ்க்கை கொடுத்த டோணி.. உண்மையை சொன்ன சேவாக் மொகாலி: டெஸ்ட் அணியிலிருந்து கோஹ்லியை நீக்கும் தேர்வாளர்களை முடிவை தடுத்து நிறுத்தியது முன்னாள் கேப்டன் டோணியும், தானும்தா ன் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். மொகாலியில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை டிவியில் வர்ணனை செய்தபோது இந்த தகவலை சேவாக் தெரிவித்தார். 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப் பயணம் செய்து, 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. அப்போது, மெல்பர்னில் நடந்த முதல் டெஸ்டில் கோஹ்லி 11 ரன்னும், 2வது இன்னிங்சில் டக்கவுட்டுமானார். சிட்னியில் நடைபெற்ற 2வது டெஸ்டிலும் விராட் கோஹ்லி, சாதிக்கவில்லை. அவர் முதல் இன்னிங்சில் 23 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 9 ரன்களும் எடுத்தார். எனவே பெர்த்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் கோஹ்லியை கழற்றிவிட்டு, அவர் இடத்தில் ரோகித் ஷர்மாவை ஆடச் செய்ய தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த டோணியும், துணை கேப்டனாக இருந்த சேவாக்கும், இந்த முடிவை கைவிட கூறி, கோஹ்லியையே தொடரச் செய்துள்ளனர். இந்த டெஸ்ட் த...
அமலாபாலின் அந்த ஆசையை நிறைவேற்றுவாரா தனுஷ்? தனுஷின் நெருங்கிய வட்டத்துக்குள் வரும் நடிகைகள் எல்லாரும் விவாகரத்து வாங்கி விடுகிறார்கள் அல்லது விவாகரத்து வாங்கிய நடிகைகள் எல்லாரும் தனுஷ் நட்பு வட்டத்துக்குள் வந்துவிடுகிறார்கள். எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி முதலில் கணவரை பிரிந்த அமலாபால் இப்போது தனுஷுடன் விஐபி2, வடசென்னை இரண்டு படங்களில் நடிக்கிறார். சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர எல்லா ஹீரோயின்களுமே ஆசைப்படுவார்கள். அமலா பாலுக்கும் அந்த ஆசை உண்டு. ஆனால் கண்டிப்பாக தனுஷ் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பது தெரியும். எனவே அட்லீஸ்ட் சூப்பர் ஸ்டாரை சந்தித்து விடவேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். இதற்கு தனுஷ் சம்மதித்தாலும் சூப்பர் ஸ்டார் சம்மதிக்க வேண்டுமே? தனுஷிடம் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தவர் நேரம் பார்த்து சொல்லி விட்டாராம். இதற்கு தனுஷின் ரியாக்‌ஷன் என்னவென்று மட்டும் நமக்கு தெரியவில்லை!