ஆசிய மகளிர் டி20: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா
பாங்காக்: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இன்று வீழ்த்தியது.
தாய்லாந்தில் நடந்து வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் செவ்வாய்கிழமை (இன்று) நடைபெற்றது.இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் இந்திய அணி கேப்டன் ஹர்மான்ப்ரீத் கௌர்.இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியின் நைன் அபிதி மட்டும் சற்று தாக்குபிடித்து 37 ரன்கள் எடுத்தார். இதானல் 20 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 97 ரன்களில் சுருண்டது. இந்தியா சார்பில் ஏக்தா பிஸ்ட் 3, அஞ்சு மற்றும் கௌர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் இந்திய மகளிர் அணி முதலிடத்துக்கு முன்னேறியது. டிசம்பர் 1-ந் தேதி இலங்கையுடன் மோதவுள்ளது.

Comments
Post a Comment