விகாரமடைந்த டெல்ற்றா (Delta Variant) 96 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...... உலக சுகாதார அமைப்பால் ஆனி மாதம் 29ம் திகதி வெளியிடப்பட்ட கொவிட் -19 சமீபத்திய நிலைமை அறிக்கையின் படி விகாரமடைந்த டெல்ற்றா 96 நாடுகளில் பதிவாகியுள்ளமை தெரிய வந்துள்ளது. சில நாடுகளில் மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள வசதிகள் இல்லாததால் விகாரமடைந்த வைரஸ்களின் பரவல் குறித்த துல்லியமான தகவல்கள் கிடைக்காமல் போகலாம் என்று அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. எனவே விகாரமடைந்த டெல்ற்றா அறிக்கையிடப்பட்ட இடங்களை விட அதிகமான இடங்களில் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விகாரமடைந்த டெல்ற்றா கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளில், எட்டு வாரங்களுக்குள் கொவிட்-19இன் முன்னைய விகாரமடைந்த வைரஸ்களை விட டெல்ற்றா முன்னணி வகிக்கின்றது. எனவே, உலகெங்கிலும் விகாரமடைந்த டெல்ற்றா பரவலில் ஒற்றுமையை எதிர்பார்க்கலாம். அடுத்த சில மாதங்களுக்குள், விகாரமடைந்த டெல்ற்றா உலகின் மிகவும் பிரபலமான கொவிட்-19 வைரஸின் திரிபாக மாறும் என்று அறிக்கை மேலும் கணித்துள்ளது. இந...
https://latesttamilnews24.blogspot.com this channel for latest news and celibrity photoshoot photos and entertainment