கோஹ்லிக்கு வாழ்க்கை கொடுத்த டோணி.. உண்மையை சொன்ன சேவாக்
மொகாலி: டெஸ்ட் அணியிலிருந்து கோஹ்லியை நீக்கும் தேர்வாளர்களை முடிவை தடுத்து நிறுத்தியது முன்னாள் கேப்டன் டோணியும், தானும்தா
ன் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
மொகாலியில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை டிவியில் வர்ணனை செய்தபோது இந்த தகவலை சேவாக் தெரிவித்தார்.
2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப் பயணம் செய்து, 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. அப்போது, மெல்பர்னில் நடந்த முதல் டெஸ்டில் கோஹ்லி 11 ரன்னும், 2வது இன்னிங்சில் டக்கவுட்டுமானார்.
சிட்னியில் நடைபெற்ற 2வது டெஸ்டிலும் விராட் கோஹ்லி, சாதிக்கவில்லை. அவர் முதல் இன்னிங்சில் 23 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 9 ரன்களும் எடுத்தார்.
எனவே பெர்த்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் கோஹ்லியை கழற்றிவிட்டு, அவர் இடத்தில் ரோகித் ஷர்மாவை ஆடச் செய்ய தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த டோணியும், துணை கேப்டனாக இருந்த சேவாக்கும், இந்த முடிவை கைவிட கூறி, கோஹ்லியையே தொடரச் செய்துள்ளனர். இந்த டெஸ்ட் தொடரிலிருந்துதான் கோஹ்லி நல்ல ஃபார்முக்கு வந்தார்.
பெர்த் டெஸ்டில் கோஹ்லி 44 மற்றும் 75 ரன்களை எடுத்தார். அடிலெய்டில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை விளாசினார் கோஹ்லி. முதல் இன்னிங்சில் 116 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 22 ரன்களும் விளாசினார் கோஹ்லி. இன்று உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் கோஹ்லி. இந்திய டெஸ்ட் அணி கேப்டனாகவும் முன்னேறியுள்ளார்.

Comments
Post a Comment