டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியில் இதுவரை இல்லா அளவு தமிழகத்தை சேர்ந்த ஐந்துபேர் கலந்து கொள்கின்றனர் இதில் மூவர் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது
திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி, திருவெறும்பூரைச் சேர்ந்த சுபா, மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த ரேவதி ஆகிய மூன்று பெண்களும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுதரும் வேகத்தில் களமிறங்குகின்றார்கள்
இந்த மூவருமே மிக மிக பின் தங்கிய குடும்பத்தார் என்பது குறிப்பிடதக்கது
இதில் ரேவதிக்கு பெற்றோர் இல்லை, தனலட்சுமி மாடுமேய்க்கும் குடும்பம் என மிக வறிய பின்னணி இவர்களுடையது
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் தடகளப் போட்டியில், 100 மீ ஓட்டத்தில் இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான டூட்டி சந்தை விட வேகமாக ஓடி கவனத்தை ஈர்த்தவர் தனலட்சுமி.
தேசிய அளவில் 20 பதங்கங்களைப் பெற்றுள்ள சுபா 8 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவற்றில் 3 பதங்கங்களைப் பெற்றுள்ளார்.
ரேவதியின் சாதனைகளும் உலக தரத்தில் இருக்கின்றன
நிச்சயம் இவர்களின் உழைப்பு பெரிது, சாதனை பெரிது அந்த சாதனையில் மிக பெரிய வாய்ப்பு அவர்களுக்கு வழங்கபட்டிருகின்றது
இவர்கள் முழுக்க முழுக்க அரசின் தயாரிப்பில் உருவானார்கள், ஹாஸ்டல் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கபெற்று உருவானார்கள்
ஆனால் மேற்கொண்டு நிலைத்து நிற்கவும் வாழ்வினை தொடர்ந்து பல விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் அரசின் மேற்கொண்ட ஆதரவு அவசியம்
இப்பொழுது இந்த வீராங்கனைகள் டோக்கியோ களம் புகும் காலம் வந்தாயிற்று
ஆனால் ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் சாதாரணமானவை அல்ல, இதுவரை மறைத்து வைத்த அதிசிறந்த வீரர்களை களமிறக்குவார்கள். உலகம் கவனித்து குறித்து இலக்கு வைத்த வீரர்களை தாண்டி யாரையெல்லாமோ இறக்கி அசத்துவார்கள்
மேலைநாடுகளும் சீனமும் தங்கள் இடங்களை விடாமல் பிடிக்க பெரும் பாடுபடும்
புதிய சூழல், புது புது முகங்கள் என ஒரு பக்கமும், ஆஜானபாகுவான தோற்றம், அச்சமற்ற ஒருவித மிடுக்குடன் வரும் அடுத்தநாட்டு வீரர்களை கண்ட ஒரு குழப்பமும் இவர்களுக்கு வரும்
ஆனால் இந்திய திருநாட்டுக்காக விளையாடுகின்றோம், இதுவரை வாங்கா பதக்கங்களை வாங்கி கொடுத்து சரித்திரம் படைப்போம் என உறுதியுடன் அவர்கள் விளையாடினால் பதக்கம் நிச்சயம்
இதுவரை இந்திய ஒலிம்பிக்கில் மலையாள லாபி பலமாக இருந்தது, தமிழர் சிவந்தி ஆதித்தன் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தபொழுது கூட அதை உடைக்க முடியவில்லை
பி.டி உஷா, பினா மோள், அஞ்சு ஜார்ஜ் என யாரெல்லாமோ கேரளத்தில் இருந்துதான் இறக்கபட்டார்கள், இன்னும் பல மாநிலங்களின் ஆதிக்கம் இருந்தது
தமிழக நலன் பிற்போடபட்டிருந்தது
மோடி ஆட்சியில் கிரிக்கெட் முதல் ஒலிம்பிக் வரை, தமிழர்களுக்கு தனி பிரதிநிதித்துவம் கொடுக்கபடுகின்றது, அதுவும் பின் தங்கிய தமிழக குடும்பங்களில் இருந்து வாய்ப்பு வழங்கபட்டிருக்கின்றது
பெரும் புள்ளிகள் சிபாரிசு, மாநில லாபி, லஞ்சம், ஊழல், சாதி, மதம் என எல்லாவற்றையும் கடந்து சரியான வகையில் வாய்ப்பினை வழங்கியிருக்கின்றது மோடி அரசு
இந்த தமிழ் மங்கைகள் இப்பொழுது உலக கவனம் பெற்றிருக்கின்றனர், அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளித்து அவர்களை உலகறிய செய்திருக்கின்றது இந்த அரசு
ஆக திராவிடம் உயர்த்தாத தமிழ்பெண்களை மோடி அரசே உலக அரங்கில் உயர்த்தி அவர்கள் முத்திரை பதிக்க வாய்பளித்திருக்கின்றது
அந்த தமிழக மங்கையர் உள்ளிட்ட ஐவர் குழுவும் பதக்கம் பெற்று இந்திய தேசத்துக்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்
தமிழக விளையாட்டுதுறைக்கு புது வெளிச்சம் காட்டியிருக்கின்றது மோடி அரசு, இதை எல்லாம் சொல்ல வேண்டிய பாஜகவினர் எங்கே "நட்சத்திரங்களை" ரசித்து கொண்டிருக்கின்றார்களோ தெரியாது
இந்தியாவில் தமிழக வீரர்களின் திறமைமேல் புது வெளிச்சம் பாய்ச்சி, தமிழக விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கும் மோடி அரசுக்கு கோடி வாழ்த்துக்கள்
(வழக்கம்போல் 3 தமிழக பெண்கள் ஒலிம்பிக் பங்கேற்க செல்கின்றனர் என்றவுடன் பிரபல விளையாட்டு வீரரும் 1950களிலே ஒலிம்பிக்கை கலக்கி மணியம்மை எனும் மாபெரும் வீராங்கனையினை உருவாக்கி ஒரே ஒலிம்பிக்கில் 30 பதக்கம் பெற்றவருமான ராம்சாமியின் மண் இது, இது அவரின் சாதனை என சிலர் கிளம்புவார்கள்.
நிச்சயம் கிளம்புவார்கள்
அந்நேரம் கேரளத்திலும், மேரிகோமின் வடகிழக்கு மாநிலத்திலும் இன்னும் பல இடங்களிலும் எந்த பெண்குல புரட்சியாளன் இருந்தான் என சிந்திக்க வேண்டியது உங்கள் பொறுப்பு)
Comments
Post a Comment