’ஷாக் அடிக்கும் மின் கட்டணம்’ - 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார்!! இந்த மாத மின் கட்டணம் திடீரென 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக மின் பயனீட்டாளர்கள், பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், வீடுகளுக்கான மின் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், முந்தைய மாதக் கட்டணம் அல்லது பயன்படுத்திய அளவை மின்வாரியத்திற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினால், கணக்கீடு செய்து பணம் கட்டலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
https://latesttamilnews24.blogspot.com this channel for latest news and celibrity photoshoot photos and entertainment